பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Added : டிச 01, 2019
Advertisement

திண்டிவனம் : விழுப்புரம் வடக்கு மண்டல உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திண்டிவனம் என்.பி.சி. கோவிந்தம்மாள் திருமண நிலையத்தில் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராமசாமி சிறப்புரையாற்றினார்.முனைவர் வடிவேல், மாநில அளவிலான கூட்டுப்பண்ணைய திட்டம் குறித்து பேசினார்.விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார நிலை மற்றும் கூட்டுப்பண்ணை யத்திட்டத்தின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் விஜயா, வேளாண்மை உதவி இயக்குநர்கள் பிரபுசங்கர், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X