பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வளர்ந்துள்ளது பொருளாதாரம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு

Added : டிச 01, 2019
Advertisement

கம்பம்: ''இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருந்த போதும் தமிழகத்தில் பொருளாதாரம் 8.2 சதவீதமாக வளர்ந்துள்ளது,''என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சுருளி அருவியில் இருநாட்கள் நடக்கும் சாரல் விழா நேற்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன், வனத்துறை அமைச்சர் சீனிவாசன்பங்கேற்றனர். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: சுற்றுலாத்துறையில் தொடர்ந்து தமிழகம் பல விருதுகளை பெற்று வருகிறது. கடந்தாண்டு தமிழகத்திற்கு 40 கோடி பயணிகள் வந்துள்ளனர். தேனி மாவட்டத்திற்கு மட்டும் 35 லட்சம் பேர் வந்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகள், மேகமலைக்கு ரோடு நன்கு அமைக்கப்பட்டுள்ளது. 2011 ல் ஜெ., போட்ட திட்டங்கள் நமக்கு பலனை தருகிறது. கல்வி, மருத்துவத்தில் முதலிடம், தொழில்துறையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். விவசாயத்துறையில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதிக நெல் உற்பத்திக்காக விருது பெற்று வருகிறோம்.சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய பொருளாதாரம் 4.1 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில்8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளும் நேர்மையாக செயலாற்றி வருகின்றன, என்றார். கலெக்டர் பல்லவிபல்தேவ், சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., ரவீந்திரநாத்குமார் எம்.பி., அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின்போஸ்லே துக்காராம், மாவட்ட வன அலுவலர் கவுதம், அ.தி.மு.க., பிரமுகர் ஸ்ரீகுமார் எஸ்.ராஜேந்திரன் , ஒன்றியச்செயலாளர்கள் கணேசன், அன்னபிரகாஷ், தேனி நகரச்செயலாளர் கிருஷ்ணக்குமார், அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆர் முருகேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், ஒன்றியச்செயலாளர்கள் ராஜேந்திரன்( சின்னமனுார்), அழகுராஜா(உத்தம பாளையம்), லோகிராஜன்( ஆண்டிபட்டி), கூடலுார் நகராட்சி முன்னாள் தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.சுருளி அருவியில் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனுகொடுக்க வந்த மார்க்சிஸ்ட், தி.மு.க. ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. முன்னதாக ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வேண்டி துணை முதல்வரிடம் மனு கொடுத்தனர். மொத்தம் ரூ. 3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 551 பயனாளிகளுக்கு துணை முதல்வர் வழங்கினார். இதனிடையே அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X