பொது செய்தி

தமிழ்நாடு

டூவீலர் ஓட்டிய சிறுவர்கள்; எச்சரித்த போலீசார்

Added : டிச 01, 2019
Advertisement

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் டூ வீலரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி செல்வோர் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதிவேகத்தில் டூ வீலரில் சென்ற சிறுவர்களை பிடித்த டி.எஸ்.பி.,சீனிவாசன் , அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினார்.

ஆண்டிபட்டியில் டூ வீலரில் அதிவேகத்தில் செல்லுதல், பள்ளி, கல்லுாரி துவங்கும், முடியும் நேரங்களில் நகர் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச்செல்வது, ஒருவரை ஒருவர் சேஸ் செய்து செல்வது போன்ற நிகழ்வுகள் குறித்து புகார் எழுந்தது. நேற்று முன்தினம் ஆண்டிபட்டியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் டூ வீலரில் சாகசம் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வந்தது.
இதில் நடவடிக்கை எடுக்க தேனி சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி அதிவேகமாக டூவீலரில் சென்ற சிலரை பிடித்தனர். அவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதால் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்தனர். டூவீலர்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்லும் நபர்கள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவர் ஓட்டிச்சென்ற டூ வீலர் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றவர் பலியானது குறிப்பிடத்தக் கது.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X