பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் சுவரில் வளரும் செடிகள் அகற்றப்படுமா

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சுவரில் வளர்ந்து வரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டிபட்டி தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இயற்கை சூழலுடன் மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின்

ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சுவரில் வளர்ந்து வரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டிபட்டி தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இயற்கை சூழலுடன் மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல்நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர்.மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் வேலப்பர் சுவாமி, கருப்ப சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்கின்றனர். கோயில் வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து பல ஆண்டுகளை கடந்துள்ளது.இந்நிலையில் தற்போது மலையில் உள்ள உயரமான கோயில் சுவரில் செடிகள் அதிகம் வளர்ந்துள்ளன. அதனால் சுவரின் உறுதித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். செடிகளை அப்புறப்படுத்தி சுவரை பாதுகாக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X