இந்தியா

வவுச்சர் ஊழியர்கள் நுாதன போராட்டம்

Added : டிச 01, 2019
Advertisement
 வவுச்சர் ஊழியர்கள் நுாதன போராட்டம்

புதுச்சேரி : பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி,100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறிபோராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்கள், 30 நாட்கள் பணி வழங்க வேண்டும். மத்திய அரசின் சட்டக்கூலி ரூ.648 வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் பணியாளர் நல கூட்டமைப்பு சார்பில், சுதேசி மில் அருகே தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை செயலர் மற்றும் தலைமை பொறியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை விலக்கி கொள்ள ஏற்பாடு செய்தார்.

வவுச்சர் ஊழியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, வவுச்சர் ஊழியர்களுக்கு பணி ஏதும் ஒதுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகளும் ஊழியர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், நேற்று மாலை 4:30 மணிக்கு, சோனாம்பாளையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தை துவக்கினர். மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நின்று போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

ஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீசார், தீ அணைப்பு துறையினர் விரைந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர் வரும் வரை போராட்டம் தொடரும் என கூறி இரவு 7:00 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்தது. காரைக்கால்இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்காலில், திருநள்ளாறு சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டி மீது வவுச்சர் ஊழியர்கள் சங்கத் தலைவர் யூசுப். செயலர் பிரபு ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X