இந்தியா

அறிவியல் கண்காட்சி

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷா மந்தீர் பள்ளியில், சாஸ்த்ரா அறிவியல் கண்காட்சி நடந்தது.

ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன், அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார். டில்லி ஏ.டி.எல் திட்ட இயக்குநர் உன்னித் பண்டிட், டாக்டர் கனகசபாபதி, ஜி.எஸ்.டி. பிரிவு சத்யகுமார் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 3000 வழங்கப்பட்டது.

இளம் அறிவியல் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 1.50 லட்சம் பரிசு தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் கோவை, விழுப்புரம், கடலுார், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்து ஆச்சாரியா பள்ளிகளும், புதுச்சேரியில் உள்ள 22 தனியார் பள்ளிகளும் கலந்து கொண்டன. கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X