வணிகவரித் துறை அதிகாரிக்கு பிரிவு உபசார விழா| Dinamalar

இந்தியா

வணிகவரித் துறை அதிகாரிக்கு பிரிவு உபசார விழா

Added : டிச 01, 2019

புதுச்சேரி : துணை வணிகவரி அதிகாரிக்கு பிரிவு உபசார விழா நடந்தது.புதுச்சேரி வணிகவரித் துறையில் துணை வணிகவரி அதிகாரியாக பணியாற்றிய ஆரோக்கியராஜ் நேற்று பணி ஓய்வுபெற்றார்.

அவருக்கு பிரிவு உபசார விழா, அலுவலக கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது. கண்காணிப்பாளர் லட்சுமி வரவேற்றார்.வணிகவரித் துறை ஆணையர் குமார் வாழ்த்தி பேசினார். துணை ஆணையர் ஸ்ரீதர், ஆரோக்கியராஜிக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். வணிகவரித் துறை அதிகாரிகள் கபாலன், இளங்கோவன், தேவராஜ், புகழேந்தி, சரவணக்குமார், தேவி ராஜலட்சுமி, சட்ட அதிகாரி ராமன், ஆணையரின் தனிச் செயலர் ஜெயக்குமார் ஆகியோர் ஆரோக்கியராஜின் பணிகளை பாராட்டி பேசினர்.தொடர்ந்து ஏற்புரையாற்றிய ஆரோக்கியராஜி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X