சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு 'செட்டாப்' பாக்ஸ் சேவை ஒதுக்கும் கேபிள் ஆபரேட்டர்கள்

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:தனியார் நிறுவன, 'செட்டாப்' பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் முன்னிலைப்படுத்துவதால், அரசு கேபிள் 'செட்டாப்' பாக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கோவை மாவட்டத்தில் குறைந்திருக்கிறது.கோவை மாவட்டத்தில், 1,183 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். 3 லட்சத்து, 22 ஆயிரத்து, 923 கேபிள் 'டிவி' இணைப்புகள் உள்ளன. இவற்றில், 80 ஆயிரம் இணைப்புகளுக்கு இன்னும் அரசு 'செட்டாப்' பாக்ஸ் சென்றடையவில்லை. மீதமுள்ள, 2 லட்சத்து, 42 ஆயிரத்து, 923 இணைப்புதாரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.ஆனால், அரசு கேபிள் ஒளிபரப்பை காட்டிலும், தனியார் சேனல் ஒளிபரப்பு நன்றாக இருப்பதாக கூறி, 80 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள், அரசு 'செட் டாப்' பாக்ஸ் வழங்காமல் இருக்கின்றனர். அதற்கு பதிலாக, தனியார் நிறுவன இணைப்புகளை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து அரசு கேபிள் 'டிவி' தாசில்தார் அருள் முருகன் கூறுகையில், ''கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களில் பெரும்பாலானவர்கள், அரசு 'செட்டாப்' பாக்ஸ்களை, மக்களிடம் முன்னிலைப்படுத்துவதில்லை. அதனால், கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவன 'செட்டாப்' பாக்ஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X