பொது செய்தி

தமிழ்நாடு

பழைய சொத்து வரியை செலுத்தலாம்

Added : டிச 01, 2019
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் அனைத்து கட்டடங்களுக்குரிய பழைய சொத்து வரியை நகராட்சியில் செலுத்தலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நகராட்சி ஆணையர் ஸ்ரீ பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணையின்படி, 1.4.2018ம் தேதி முதல் சொத்து வரி உயர்வு செய்யப்பட்ட அனைத்து கட்டடங்களுக்கும் உயர்வு செய்யப்பட்ட வரியை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக பரிசீலித்து ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1.4.2017 ல் மறு அளவீடு செய்யப்பட்டு சொத்துவரி உயர்வு செய்யப்பட்ட கட்டடங்களுக்கும் உயர்வு செய்யப்பட்ட வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் கடந்த 1.4.2018ம் தேதிக்கு பின்பிருந்த பழைய சொத்து வரியையே, தற்போது செலுத்திட வகை செய்யப்பட்டுள்ளது.எனவே பழைய சொத்துவரியை நகராட்சியில் உடன் செலுத்தி பயன்பெறவும். உயர்வு செய்யப்பட்ட சொத்துவரி அடிப்படையில் வரி செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகை வரும் ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X