மதுரை: மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 14 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.293 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வார்டுகளில் உள்ள 135 குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்தோர் அடிப்படை வசதிகோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து சட்டசபையில் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி பேசினார். இதை தொடர்ந்து பாதாள சாக்கடை அமைக்க அரசு ரூ.293 கோடி ஒதுக்கியது. விரைவில் பணி துவங்க உள்ளது.இதுகுறித்த ஆலோசனை கூட்டம் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் நடந்தது. எம்.எல்.ஏ., மூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த சங்க நிர்வாகிகள் சித்திரைவேல் பாண்டியன், முருகேசன் உள்ளிட்டோர் அரசுக்கும், எம்.எல்.ஏ.,விற்கும் நன்றி தெரிவித்தனர்.