சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடிக்கு 'குண்டாஸ்'

Added : டிச 01, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில், மக்களை அச்சுறுத்தும் வழக்குகளில் உள்ள வாலிபரை, போலீசார் குண்டர்தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம், கமலா நகர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தானப்பன் மகன் கதிரவன்,38; இவர் மீது, அடிதடி, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கதிரவனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து, கதிரவனை விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X