சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் கொடுத்தவரை தாக்கிய 3 பெண்கள் கைது

Added : டிச 01, 2019
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டை சேர்ந்தவர் சிவக்குமார் என்பவரது மனைவி சகாயம், 30. இவர் தன் கணவரின் தங்கை விஜயலட்சுமிக்கு ரூபாய் 50 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார்.விஜயலட்சுமியிடம் கடனை திரும்ப தருமாறு சகாயம் பலமுறை கேட்டுள்ளார். விஜயலட்சுமி திரும்ப தராததால் சகாயம் விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, 36, அவரது உறவினர்கள் ஜெயந்தி, 38: நாகராணி,56: ஆகியோருடன் நேற்று முன்தினம் சகாயம் வீட்டிற்கு சென்று, தகராறு செய்து, அவரை தாக்கினர்.

காயமடைந்த சகாயம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விஜயலட்சுமி, ஜெயந்தி, நாகராணியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X