விழுப்புரம் : விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தில் அமைந்துள்ள நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி(சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பள்ளி முதல்வர் எச்.ரோஸ் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் ஏஞ்சலின் பிரியா, மக்கள் தொடர்பு அலுவலர் ராமானுஜம் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரி, தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை சார்பில், டாக்டர்கள் ராணிகலில்பா, தக்ஷிணி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ன் கண்களை பரிசோதனை செய்தனர்.மேலும், உணவு முறைகள் பற்றியும், கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என டாக்டர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.