பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்வு

Added : டிச 01, 2019
Share
Advertisement
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு செஞ்சி, பாக்கம், மேல் மலையனுாரில் பெய்த மழை காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக வினாடிக்கு ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது.இதையடுத்து

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு செஞ்சி, பாக்கம், மேல் மலையனுாரில் பெய்த மழை காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக வினாடிக்கு ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது.இதையடுத்து வீடூர் அணையில் மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கனஅடி) 27 அடியாக இருந்த நீர் மட்டம் , 28.5 அடியாக (350 மில்லியன் கன அடி) உயர்ந்து.

தொடர்ந்து மழை பெய்தால் மொத்த கொள்ளளவை எட்டி, விரைவில் விவசாய பாசனத்திற்கு திறந்து விடுவார்கள் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வீடூர் அணையின் மூலம் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 ஏக்கரும் புதுச்சேரியில் ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுவது குறிப்பிட தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X