இந்தியா

'பகலிலும் எரியும்' மின்விளக்குகள்

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருபுவனை : புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில் பகுதியில் மின் விளக்குகள் மற்றும் ைஹமாஸ் விளக்குகள் பகலிலும் எரிவது தொடர்கதையாக உள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் 45-ஏ தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரியின் எல்லைப்பகுதியான மதகடிப்பட்டில் இருந்து திருபுவனை மற்றும் திருவாண்டார்கோவில்வரை 3 கி.மீ., துாரத்திற்கு

திருபுவனை : புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில் பகுதியில் மின் விளக்குகள் மற்றும் ைஹமாஸ் விளக்குகள் பகலிலும் எரிவது தொடர்கதையாக உள்ளது.

புதுச்சேரி-விழுப்புரம் 45-ஏ தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரியின் எல்லைப்பகுதியான மதகடிப்பட்டில் இருந்து திருபுவனை மற்றும் திருவாண்டார்கோவில்வரை 3 கி.மீ., துாரத்திற்கு சாலையோரம் பல லட்சம் ரூபாய் செலவில் தெருமின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை (தேசிய நெடுஞ்சாலை) மூலம் அமைக்கப்பட்ட இந்த மின்விளக்குகள் பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பகலிலும் எரியும் மின்விளக்குகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும், தனியார் நிர்வாகத்தின் பராமரிப்பு இன்மையாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மதகடிப்பட்டு, திருபுவனை மற்றும் திருவாண்டார்கோவில் பகுதியில் மின்விளக்குகள் பகலிலும் எரிவது தொடர்கதையாக உள்ளது.ஹைமாஸ் விளக்குகள்: அதேபோல் திருவாண்டார்கோவில் பஸ் நிறுத்தம் மற்றும் திருபுவனை பஸ் நிறுத்தத்தில் உள்ள ஹைமாஸ் விளக்குகளும் மாதக்கணக்கில் பகலிலும் எரிந்து கொண்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு திருபுவனை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் இது குறித்து நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பகலிலும் மின்விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாவதோடு, பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளும் குறுகிய காலத்தில் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X