கோலாகலம்! என்.சி.சி., 71வது தின கொண்டாட்டம் ... கொட்டும் மழையிலும் மிடுக்காக அணிவகுப்பு | Dinamalar

இந்தியா

கோலாகலம்! என்.சி.சி., 71வது தின கொண்டாட்டம் ... கொட்டும் மழையிலும் மிடுக்காக அணிவகுப்பு

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
கோலாகலம்!  என்.சி.சி., 71வது தின  கொண்டாட்டம் ...    கொட்டும் மழையிலும் மிடுக்காக அணிவகுப்பு

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமை அலுவலகத்தில் என்.சி.சி., 71வது தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. \

கொட்டும் மழையிலும் தேசிய மாணவர் படையினர் மிடுக்காக அணிவகுப்பு நடத்தினர். புதுச்சேரி என்.சி.சி., குரூப் கமாண்டர் ஜெயச்சந்திரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கப்பல் மற்றும் விமானங்களின் மாதிரிகள் மாணவர்கள் பார்வை யிடுவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. மேலும் துாய்மை இந்தியா உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரை போட்டியும் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.

என்.சி.சி., குரூப் கமாண்டர் ஜெயச்சந்திரன் பேசுகையில், பள்ளிப்பருவத்திலும்,கல்லுாரி பருவத்திலும்சமூகத்தின்மீது அக்கறை செலுத்தும் விதத்தில், இளம்வயதினரை வழி நடத்த, என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது.ராணுவத்திலும்,காவல் துறையிலும்சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்.சி.சி., அளிக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது 608 மாவட்டங்களில் 17 லட்சம் மாணவ மாணவிகள் உள்ளனர்.

புதுச்சேரி என்.சி.சி., தலைமை அலுவலகத்தினை பொறுத்தவரை, புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களும் அடங்கி உள்ளன. இதில் 117 பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 10,500 மாணவ, மாணவிகள் சேர்ந்து, நாட்டின் சேவை பணிக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில், என்.சி.சி., முதுநிலை, இளநிலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X