சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாறுமாறாக கார் ஓட்டிய ஆசாமி! குடிபோதையில் போலீசாரிடம் ரகளை

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த நபர், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார்; அவருக்கு, 10 ஆயிரத்து, 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை, ரத்தினபுரி போலீசார், சிவானந்தா காலனியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். தாறுமாறாக வந்த காரை நிறுத்த முயன்றும், நிற்காமல் சென்றது. அக்காரை பொதுமக்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த நபர், தள்ளாடியபடி வெளியே வந்தார்.'பிரீத்அனலைசர்' கருவி மூலம் போலீசார் சோதனை செய்ய முயன்றனர். மறுப்பு தெரிவித்த அவர், சப்தம் போட்டு ரோட்டில் இறங்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்து, அப்பகுதி மக்கள் திரண்டனர்.ரகளையில் ஈடுபட்ட நபரை கட்டாயப்படுத்தி, தங்களது வாகனத்தில் ஏற்றிய போலீசார், அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தது உறுதியானதால், ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.அதில், ரத்தினபுரி, மருதுகுட்டி நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் ஸ்டாலின் பிரபு,32 என்பது தெரிந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக, 10 ஆயிரத்து, 600 ரூபாய் அபராதம் விதித்தனர். குடிபோதையில் தள்ளாடியதால், ஸ்டாலின் பிரபு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, அபராத தொகையை கட்டினர். பின், அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X