சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வினாடி வினா விறுவிறு; மாணவர்கள் சுறுசுறு!

Added : டிச 01, 2019
Advertisement

கோவை, டிச. 1-

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில், மெகா வினாடி வினா போட்டி காலிறுதி சுற்றில், அசத்தலான பதில்களால், மாணவர்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த மெகா வினாடி வினா போட்டி, பிரஸ் காலனியில் உள்ள தம்பு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 750 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஹெச்' அணியை சேர்ந்த பிரனீத், நகுணா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமையாசிரியர் ரமேஷ், துணை தலைமை ஆசிரியர் மாடசாமி ஆகியோர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.மற்ற மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர்கள் விஜயகுமரன், சுஜினி, பிரபா, ரங்கசாமி, கோமதி, யுகாஷினி, உஷாதேவி, ரஞ்சிதா, பிரியா, ஷ்வர்ணா, கவிதா, நிஷா, பிரேமா, ரேணுகா ஆகியோர் பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X