இந்தியா

ஓய்வூதிய திட்டங்களுக்கான சிறப்பு சேர்க்கை முகாம்

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : சிறு வியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கான சிறப்பு சேர்க்கை முகாமை, தொழிலாளர் நல ஆணையர் வல்லவன் துவக்கி வைத்தார்.

சிறு வியாபாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாமிற்கு தொழிலாளர் துறை ஏற்பாடு செய்துள்ளது.சிறப்பு சேர்க்கை முகாமின் துவக்க விழா, தொழிலாளர் துறை கருத்தரங்கக் கூடத்தில் நேற்று நடந்தது.

தொழிலாளர் நல ஆணையர் வல்லவன், முகாமை துவக்கி வைத்தார். துணை ஆணையர் முத்துலிங்கம், தொழிலாளர் நல அதிகாரி(அமலாக்கம்) கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின், தொழிலாளர் நல ஆணையர் வல்லவன் அளித்த பேட்டி:சிறு வியாபாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திலும் 18 வயது முதல், 40 வயது வரையிலானவர்கள் சேர்ந்து பயன்பெற முடியும். சிறு வியாபாரிகளாக இருந்தால், ஆண்டு விற்பனை அளவு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.இந்த திட்டங்களில் பாதி பிரிமியம் தொகையை பயனாளிகள் செலுத்தினால் போதும். மீதியுள்ள பாதி தொகையை மத்திய அரசு செலுத்தும். மாநில அரசின் பென்ஷன் திட்டத்தில் பயன் பெற்றாலும், மத்திய ஓய்வூதியத் திட்டத்திலும் பயன் பெறலாம். 60 வயது நிறைவடைந்த வுடன் மாதம் ரூ.3,000 கிடைக்கும். ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால் அவரது மனைவி அல்லது கணவருக்கு 50 சதவீதம் பென்ஷன் கிடைக்கும்.

தொடர்ந்து, பிரிமியம் தொகையை செலுத்த முடியாவிட்டால், செலுத்திய தொகையை வங்கி வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். சிறப்பு சேர்க்கை முகாம், வரும் 6ம் தேதி வரை நடத்தப்படும். முகாம் முடிந்தாலும் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். பொது சேவை மையங்கள் மூலமாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்டுமான தொழிலாளர்களுக்கு பிரிமியம் தொகையை, நல வாரியம் மூலமாக செலுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

அதுபோல, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தொகையை மத்திய அரசே செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, வல்லவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X