சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் சடலம் வாங்க மறுப்பு: உறவினர்கள் போராட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:உடலில் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவன் நேற்று உயிரிழந்தார்.பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டிணம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜன் மகன் வினுபிரபு,16; மாற்றுத்திறனாளி மாணவன். தெக்கலுார் காதுகேளாதோர் பள்ளியில், விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர், மாணவனை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.மருத்துவமனை விரைந்து வந்த பெற்றோர், டாக்டர்களிடம் விசாரித்தபோது, தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், குறிப்பிட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர். சிகிச்சையில் இருந்த அம்மாணவன், நேற்று காலை உயிரிழந்தார்.மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள், மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'பள்ளி நிர்வாகத்தினர் வயிற்று வலி என்றனர்; இங்கு வந்து பார்த்தால் தற்கொலை முயற்சி நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. விடுதி நிர்வாகத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளார்கள். மாணவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம்' என்றனர்.போலீசார் பேச்சு நடத்தி தொடர்ந்து, மதியம், 2:30 மணியளவில், மாணவனின் சடலத்தை பெற்றுச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X