சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி?

Added : டிச 01, 2019
Advertisement

திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவான நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருக்கோவிலூர் கடை வீதியில், நகை கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்த நபர் ஒருவர் பல்வேறு இடங்களில் பெண் ஏஜென்டுகளை நியமித்து, தீபாவளி சீட்டு நடத்தி வந்தார்.மாதம் ஆயிரத்து 300 ரூபாய் வீதம் 10 மாதங்கள் செலுத்தினால் 4 கிராம் தங்க காசு, பட்டாசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து பல ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார்.இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் அவரிடம் சீட்டு கட்டினர்.

கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு நகை தரவில்லை. தங்கம் விலை உயர்ந்ததால் ஓரிரு நாட்களில் தருவதாக கூறி சமாதானப்படுத்தி வந்தார்.மேலும் ஆயிரத்தி 300 ரூபாய் கொடுத்தால் நகை தருவதாக கூறினார். இதனை நம்பி ஏராளமானோர் அந்த தொகையையும் செலுத்தினர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.இந்நிலையில், கடந்த பைனான்ஸ் நடத்தி வந்தவர் திடீரென தலைமறைவானார். இதையடுத்து பணம் கட்டியவர்கள் நகை கேட்டு ஏஜென்டுகளை நச்சரிக்க துவங்கினர்.

இதையடுத்து 50க் கும் மேற்பட்ட பெண் ஏஜென்டுகள் நேற்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டு தருமாறு கூறி இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி யிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X