பொது செய்தி

தமிழ்நாடு

சந்தன மர கடத்தல்; பல்கலை ஆட்களுக்கு தொடர்பு?

Added : டிச 01, 2019
Share
Advertisement
வடவள்ளி;கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் இருந்து சந்தன மரங்கள், தொடர்ந்து வெட்டிக் கடத்தப்படுவது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை பாரதியார் பல்கலை கழகம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. விலை மதிப்புமிக்க சந்தன மரம் மற்றும் தேக்கு மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. வளாக பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ

வடவள்ளி;கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் இருந்து சந்தன மரங்கள், தொடர்ந்து வெட்டிக் கடத்தப்படுவது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை பாரதியார் பல்கலை கழகம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. விலை மதிப்புமிக்க சந்தன மரம் மற்றும் தேக்கு மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. வளாக பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பல்கலை வளாகத்துக்குள் வரும் பொதுமக்களை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.கடந்த, 27ம் தேதி இரவு, பல்கலையில், மேலாண்மைத்துறை அருகில் உள்ள நாற்றுப்பண்ணையில் இருந்த, 12 அடி உயரமுள்ள சந்தன மரத்தை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தியிருப்பதாக, பல்கலை நிர்வாகத்தினர், வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பல்கலையில், சந்தன மரம் வெட்டிக் கடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த இரு ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிறைந்த பல்கலையில், தொடர்ந்து, சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால், உண்மையில் வெளிநபர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா என, பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'பாரதியார் பல்கலையில், சந்தன மரம் கடத்துவது தொடர்கிறது. பல்கலை நிர்வாகம், சந்தன மரக்கடத்தலை முறையாக தடுப்பதில்லை. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' என்றனர்.போலீசார் கூறுகையில், 'பாரதியார் பல்கலையில், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து சந்தன மர கடத்தல் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 'பல்கலைக்குள் இருக்கும் ஆட்கள் துணையின்றி, சந்தன மரங்களை கடத்த முடியாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X