மதுரை: 'கொலை வழக்கில் வாய்பேச இயலாதோர் சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தால்தான் செல்லும். போலீசில் அளிப்பது ஏற்புடையதல்ல. கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை கணேஷ் நகர் ஜெரின் (எ) திவான். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். அவரை 2014 ல் வலுக்கட்டாயமாக ஜெரின் அழைத்துச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு பலியானார். மேதா திவான் உட்பட சிலர் மீது கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மேதா திவானுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு:பெண்ணின் சகோதரர் வாய் பேச முடியாதவர்; செவித்திறன் குன்றியவர். அவரது சாட்சியத்தை சைகை மொழியில் வாய்பேச இயலாதோர் மற்றும் மற்றும் செவித்திறன் குன்றியோருக்கான புதுக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன்போலீசார்பதிவு செய்துள்ளனர். இது இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்புடையதல்ல.சாட்சிய சட்டப்படி வாய்பேச இயலாதோரின் சாட்சியத்தை எழுத்து அல்லது சைகை மொழியில் நீதிமன்றத்தில்தான் அவசியம் பதிவு செய்ய வேண்டும். போலீசார் தேர்வு செய்யும் இடத்தில் சாட்சியம் அளிக்க முடியாது என இந்நீதிமன்றம் கருதுகிறது.உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தவறிவிட்டனர். சாட்சிகளில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். சந்தேகத்திற்கு இடமின்றி மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. மனுதாரருக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE