புதுச்சேரி : பாகூர் உழவர் உதவியகத்திற்குட்பட்ட கிராம விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உதவி வேளாண் அலுவலர் மாசிலமாணி வரவேற்றார். வேளாண் அலுவலர்கள் பரமநாதன், நடராஜன் ஆகியோர் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணுாட்டசத்து, இயற்கை விவசாயத்தில் மண் வளம் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.இணை இயக்குனர் ராகவன் மண் வள அட்டையின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி மண் வள மேலாண்மை குறித்தும், இணை இயக்குனர் பூமிநாதன் மண் வள அட்டையை விவசாயிகளுக்கு வழங்கி பேசினர்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட உதவியாளர் பிரபு சிறப்புரையாற்றினார். உதவி வேளாண் அலுவலர் கலியபெருமாள் நன்றி கூறினார்.