வாய்க்காலில் விழுந்த ஜிப்மர் ஊழியர் பலி| Dinamalar

இந்தியா

வாய்க்காலில் விழுந்த ஜிப்மர் ஊழியர் பலி

Added : டிச 01, 2019

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில், குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த ஜிப்மர் ஊழியர் உயிரிழந்தார்.

கோரிமேடு, காமராஜர் நகர், கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஷியாமளா. இவரது கணவர் கருணாகரன். ஜிப்மரில் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். ஷியமளாவின் வீட்டில் தங்கியிருந்த தம்பி சரவணன், 31. ஜிப்மரில் ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளராக பணியாற்றினார்.குடிப்பழக்கத்திற்கு ஆளான சரவணன், நண்பர்களுடன் குடித்து விட்டு பொழுதை கழித்து வந்துள்ளார். இதனை அவரது சகோதரி ஷியமளா தட்டி கேட்டும் பொருட்படுத்தவில்லை.

கடந்த 29 ம் தேதி காலை 11:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பணிக்கு செல்லாமல் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் நண்பர்களுடன் மதுபானம் குடித்து கொண்டுள்ளார். அப்போது, பாலாஜி ஒயின்ஷாப் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்தார்.அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சரவணன் வரும் வழியிலே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து ஷியமளா அளித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X