இந்தியா

சமையல் போட்டியில் தொண்டமாநத்தம் முதலிடம்

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : மத்திய சமையல் கூடங்களுக்கு இடையிலான சமையல் போட்டியில் தொண்டமாநத்தம் முதலிடம் பிடித்தது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் 88 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் மத்திய சமையல் கூடங்கள் மூலமாக மதிய உணவினை தயாரித்து வினியோகித்து வருகிறது.

புதுச்சேரி பிராந்தியத்தில் 11 மத்திய சமையல் கூடங்கள் உள்ளன.மத்திய சமையல் கூடங்களுக்கு இடையிலான சமையல் போட்டி சண்முகாபுரம் மத்திய சமையல் கூடத்தில் நேற்று நடந்தது. ஆரோக்கியமான தக்காளி சாதம் செய்யும் போட்டியில், தொண்டமாநத்தம், பிள்ளைச்சாவடி மற்றும் வில்லியனுார் சமையல் கூடங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மனையியல் துறைபேராசிரியர் அலமேலு மங்கை, புதுச்சேரி பல்கலைக்கழக உணவு அறிவியல் துறை பேராசிரியர் ஹரிபிரியா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி சிறந்த உணவினை தேர்வு செய்தனர்.

வெற்றிப் பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பாரதியார் ேஹாட்டல் மேலாண்மை கல்லுாரி முதல்வர் கணேசன், உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், துணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம், மத்திய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மதிய உணவு கூட சமையல் கலைஞர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பான உணவு தயாரிப்பு, ஆரோக்கியமான உணவுகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X