அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி முதல்வர் வித்யா தலைமை தாங்கினார். செஞ்சி டி.இ.ஓ., நடராஜன் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். இதில், விநாயகமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் இளங்கோ, அலுவலர் ரவி, சண்முகம், மாருதி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement