காரைக்கால் : காரைக்காலில் மீனவர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நாகை தமிழக மீனவப்பெண்கள் தொழிலாளர் சங்க நிர்வாகி காளியம்மாள் வரவேற்றார்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் தீபிகா, பானுமதி, எழுத்தாளர் குருஸ் ஆகியோர் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் நீரோடி முதல் பழவேற்காடு வரை உள்ள அனைத்து மீனவ மக்களை ஒருங்கிணைப்பது, மீன்பிடி தொழிலில் அரசின் சட்டங்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், ஆழ்கடல் மீன் பிடிப்பின் போது கவனிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.