சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்று மணல் கடத்திய4 பேர் மீது வழக்கு

Added : டிச 01, 2019
Advertisement

விழுப்புரம் : வளவனுார் அருகே ஆற்று மணல் கடத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மற்றும் போலீசார், அரசமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது அனுமதியின்றி டிப்பர் லாரியில் ஆற்று மணல் ஏற்றிச் சென்ற, சந்தோஷ், தேவநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல், வடவாம்பலம் மலட்டாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரியை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடமாம்பலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X