பொது செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' பதிவுக்கு ஆர்வம்: திணறுது கப்பலூர் டோல்கேட்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (2)
Advertisement
'பாஸ்டேக்' பதிவுக்கு ஆர்வம்:  திணறுது கப்பலூர் டோல்கேட்

திருமங்கலம்: கப்பலுார் டோல் கேட்டில் 'பாஸ்டேக்' பதிவுக்கு வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனர்.

வாகனங்கள் முன் கூட்டியே பணம் செலுத்தி 'டோல்கேட்டை' பயன்படுத்தும் 'பாஸ்டேக்' முறை டிச.,15 முதல் அமலாகிறது. இந்த 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் அரசு பொது சேவை மையம், சில வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. தவிர டோல்கேட் மையத்திலும் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் கப்பலுார் டோல்கேட்டில் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கேற்ப வசதிகள் செய்யப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் டோல்கேட் ஊழியர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

எனவே டோல்கேட்டில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் வினியோகத்தை முறைப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜயலக்ஷ்மி சௌமியன் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-டிச-201901:27:51 IST Report Abuse
விஜயலக்ஷ்மி சௌமியன் மிக்க மகிழ்ச்சி. தினமலரின் பொது தொண்டாக இதை பார்க்கிறேன். மக்களை பாதிக்கின்ற அல்லது சங்கடங்களுக்கு உருவாக்குகின்ற நிகழ்வுகளுக்கு காரணம் அரசு துறைகளின் மெத்தனம் அல்லது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள விரும்பாமல் வந்தபின் பாப்போம் என்ற மனநிலையே. மக்கள் பிரதிநிதிகள் அல்லவே இதை உடனடியாக சம்பந்த பட்ட அரசு துறைகளுக்கு எடுத்து சென்று சிறப்பு செய்திருக்கவேண்டும். மேலும் அவர்கள் இதை சட்டசபையில் அரசின் கவனத்திற்கு கொணர்ந்து அரசு என்ன என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, அல்லது வசதிகளை செய்திருக்கிறது அது போதாது என்றால் இன்னும் அதிகம் செய்து தாவரவேண்டும் என்று கோரிக்கை விடுப்பது அல்லவே அவர்களின் தலையாய கடைமை. அவர்கள் சார்ந்த கட்சியின் பல்வேறு மட்ட ஊழியர்கள் இதை எம் எல் ஏ களுக்கு சொல்லி இருக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் அடிப்படை எண்ணம் பெருகவேண்டும். தினமலர் வாசகர்களின் பிரதிநிதிகளாகவும் மக்களின் பிரதிநிதியாகவும் இந்த செய்தியை தந்திருக்கிறது. நிச்சயம் அதிகாரிகள் இதை படிப்பார்கள் அப்டித்து அவர்கள் உடனடியாக விரைந்து ஆவண செய்வார்கள். மலருக்கு நன்றி. வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-டிச-201905:08:27 IST Report Abuse
 nicolethomson இந்த பாஸ்ட் டேக்கில் ஏன்தான் அரசு இப்படி உயிரை எடுக்குதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X