இந்தியா

வெங்காயம் சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்

Added : டிச 01, 2019
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் சாம்பார் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான ெதாழிலாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வறண்டன.விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்து காய்கறி சாகுபடி மற்றும் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.குறைந்த செலவில் அதிக லாபம் தரும் சாம்பார் வெங்காயத்தை சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, புது பாலப்பட்டு, வட பாலப்பட்டு, நெடுமானுர் காட்டுக் கொட்டாய், பொய்க்குனம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு சங்கராபுரம் பகுதியில் சாம்பார் வெங்காயம் சாகுபடி பரப்பளவு அதிகளித்துள்ளது. 5 மாத பயிரான வெங்காயம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும். அறுவடை சமயத்தில் சேலம், திருச்சி, பெங்களூரு, சென்னை, வேலுர் பகுதி வியாபாரிகள் வெங்காயத்தை மொத்தமாக வாங்கி செல்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X