சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்திய வாலிபர் கைது

Added : டிச 01, 2019
Advertisement

மயிலம் : மயிலம் அருகே பைக்கில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமைக் காவலர்கள் முருகன், சங்கர் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து மயிலம் நோக்கி வந்த பைக் ஒன்று, போலீசாரை கண்டதும் திடீரென திரும்பியது. பைக்கை மடக்கிய போலீசார், சிக்கிய வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அவர், திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் திகில் (எ) ஜெகதீசன், 36, என்பதும், சாராயம், கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அதே போல், பைக்குகள் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஜெகதீசனை கைது செய்த மயிலம் போலீசார், அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயம், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பல்சர், ஸ்பிளண்டர் பைக்குகள், ரூ.55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X