பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுகள் இணைப்புக்காக 7 மாநில முதல்வர்கள் கூட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

மதுரை: 'தமிழகத்தின் நன்மை கருதி ஆறுகள் இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற 7 மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்' என தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியது.மதுரையில் இந்த இயக்க மாநில நிர்வாகிகளின் திட்டமிடல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் சுப்பிரமணி, ஆலோசகர் ஏ.சி.காமராஜ், மதுரை ஒருங்கிணைப்பாளர் ரவி, துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், பம்பை அச்சன்கோயில் வைப்பாறு நதிநீர் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு மற்றும் பம்பை - அச்சன்கோயில் - வைப்பாறு இணை ஆகிய திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தை சென்னையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் செயல்வடிவம் பெற பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X