இந்தியா

பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி

Added : டிச 01, 2019
Advertisement
 பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் நெல் நடவு செய்யும் வயலில் தழைகளை அடி உரமாக பயன்படுத்தும் பாரம்பரிய முறைப்படி பயிர் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தியாகதுருகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் ஓரளவு நிரம்பியுள்ளன. இதனால் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.மகசூலைப் அதிகரிக்க ரசாயண உரங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இருப்பினும் விவசாயிகள் சிலர் பாரம்பரிய முறையான இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல் நடவு செய்யும் வயலில் மரங்களின் தழைகளை வெட்டி போட்டு மக்கச் செய்து அடி உரமாக பயன்படுத்துகின்றனர்.

வேப்பமரத்தின் தழைகளை அடியுரமாக பயன்படுத்துவதால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். அதேபோல் சாண எரு, பஞ்ச காவ்யம் ஆகியவை பயிர் சாகுபடியில் பயன்படுத்துவது விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.அதன்படி விவசாயிகள் பலர் நெல் சாகுபடிக்கு வேப்ப இலைகளை வயல்களில் வெட்டிப்போட்டு, மக்கச் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X