பொது செய்தி

தமிழ்நாடு

ராஜகணபதி கோவில் குளத்தை மீட்க தீர்மானம்

Added : டிச 01, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில், இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, வள்ளலாளர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைமை சேவகர் சிவாஜி தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர் சக்திமாலை சித்தர் சிறப்புரை ஆற்றினார்.விழுப்புரம், கிழக்கு சண்முகபுரம் பகுதியில் உள்ள ராஜ கணபதி கோவில் மற்றும் கோவில் குளத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில், ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவும், கோவில் வளாகத்தை துாய்மை படுத்த குழு அமைக்கவும், கோவில் அர்ச்சகர்களுக்கு முறையாக தாமதமின்றி, சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், ராஜகணபதி கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X