மதுரை: தேனி மாவட்டம் மேல்மங்கலம் முத்தையா. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் 56. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆபத்தான அரிய வகை ரத்தக்குழாய் நோய், இருதய வால்வில் கசிவு இருப்பது இருந்தது. மதுரை உத்தங்குடி பிரீத்தி மருத்துவமனை 'ஹார்ட் இன்ஸ்டிடியூட்'டில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதய வால்வை மாற்றாமல், பழுது நீக்கி மீண்டும் பொருத்தும் சிக்கலான அறுவைச் சிகிச்சையை டி.இ.இ., என்ற உள்நோக்கி 'எக்கோ' பரிசோதனை மூலம் டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர். அவர் எந்த மருந்து, மாத்திரையையும் உட்கொள்ள அவசியம் இல்லை. தென் தமிழகத்தில் முதன்முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சிவகுமார், நிர்வாக இயக்குனர் டாக்டர் ேஹமா தெரிவித்தனர்.