இந்தியா

தினமலர் செய்தி எதிரொலி

Added : டிச 01, 2019
Advertisement

சங்கராபுரம் : 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக சேதமடைந்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்க பள்ளி கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்கப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் 2 வகுப்பறை கொண்ட ஓட்டு கட்டடத்தின் மேற் கூரை சேதமடைந்து, மழை காலத்தில் பள்ளிக்குள் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், சேதமடைந்த பள்ளி மேற்கூரையில் குரங்குகள் ஏறி விளையாடுவதால், ஓடுகள் அவ்வப்போது வகுப்பறைக்குள் விழுந்தன.இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.

அதையடுத்து, சங்கராபுரம் ரோட்டரி கிளப், பள்ளி மேலாண்மை குழு, ஆசிரியர்கள் நிதி என ரு.1.15 லட்சத்தில் மேற்கூரைகள் மாற்றப்பட்டு புதிதாக தகர ஷீட் போடப்பட்டு, பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது.இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இட நெருக்கடியில் சிக்கி தவித்த பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X