மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மூலக்காட்டில் உள்ள பயணியர் நிழற்குடை பாராக மாறி வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சேராப்பட்டிற்கு செல்லும் வழியில் உள்ள மூலக்காட்டில் அரசினர் உயர்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இப்பகுதியில், மூலக்காடு பஸ் நிறுத்தம், பாட்டப்பன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளன.இப்பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையை இரவு நேரத்தில் குடிமகன்கள் மது குடிக்கும் பாராக மாற்றி வருகின்றனர்.இதனால், அவர்கள் போதை தலைக்கேறியதும் பஸ்சிற்காக காத்திருக்கும் பொது மக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.
பஸ் ஏற வந்து காத்திருக்கும் பொது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்களை விரட்டி அடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.