கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான பள்ளி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் காலனியைச் சேர்ந்த சேகர் மகன் கவுதம்,17; சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிற்கு வந்த கவுதம், 19ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.ஆனால், பள்ளிக்கு வரவில்லை என பள்ளியிலிருந்து அவரது பெற்றோருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கவுதம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.