யானை மிதித்து இதுவரை 17 பேர் பலி: இழப்பீடுக்கு விழி பிதுங்கி காத்திருப்பு

Added : டிச 01, 2019
Advertisement

பேரூர்:கோவை வனக்கோட்டத்தில், நடப்பாண்டு யானைகள் தாக்கியதில், 17 பேர் இறந்துள்ளனர். இழப்பீடு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிரமத்தில் தவிக்கின்றனர்.கோவை வனக்கோட்டத்தில், ஏழு வனச்சரகங்கள் உள்ளன. மொத்த பரப்பளவு, 670 சதுர கிலோ மீட்டர்.
இதில், கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, சிறுமுகை வனச்சரகங்களில், யானை - மனித மோதல் அடிக்கடி நடக்கிறது. கடந்த, 2011-12ல் இருந்து, 2018 ஜன., வரை, காட்டு யானை தாக்கி, 75 பேர் பலியாகினர். நடப்பாண்டில் இதுவரை, 17 பேர் இறந்துள்ளனர். இதில், கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களில் மட்டும், 15 பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத் தலைவர்கள். இவர்களை நம்பியே குடும்பங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டிய, ரூ.4 லட்சத்தில், முன்பணமாக, ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மீதி தொகையான, ரூ.3.5 லட்சம் இதுவரை வழங்காததால், அக்குடும்பங்கள் தவித்து வருகின்றன.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டோருக்கு, நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் இருந்து, அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு செய்ததும் வழங்கப்படும். வரும் காலங்களில் எவ்வித சிரமமுமின்றி, உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X