உளுந்துார்பேட்டை : திருநாவலூர் அருகே மாயமான ஐ.டி.ஐ., மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் திலீபன், 16; திருவெண்ணைநல்லுார் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீசியன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.படிப்பதற்கு பெற்றோர் பணம் தராததால் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் ஐ.டி.ஐ., க்கு செல்வதாக கூறி, சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான திலீபனை தேடி வருகின்றனர்.