பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வி கடன் பெற்றவர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது'

Added : டிச 01, 2019
Share
Advertisement
கோவை:'பொருளாதார நிலையால், பெரிய நிறுவனங்களே தள்ளாடும் நிலையில், கல்வி கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி தரக்கூடாது' என, கோவை எம்.பி., நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:படித்து முடித்ததும் வேலை கிடைக்கும், கடனை திருப்பிச் செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் கல்வி கடன் பெறுகின்றனர். தற்போதைய நிலையில், வேலையில் இருப்பவர்கள் கூட,

கோவை:'பொருளாதார நிலையால், பெரிய நிறுவனங்களே தள்ளாடும் நிலையில், கல்வி கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி தரக்கூடாது' என, கோவை எம்.பி., நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:படித்து முடித்ததும் வேலை கிடைக்கும், கடனை திருப்பிச் செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் கல்வி கடன் பெறுகின்றனர். தற்போதைய நிலையில், வேலையில் இருப்பவர்கள் கூட, நீக்கப்படுகிறார்கள்.காலி பணியிடங்களை அரசு துறை நிரப்புவதில்லை. சட்ட, சமூக பாதுகாப்பான வேலை கேள்விக்குறியாகி உள்ளது. இச்சூழலில், கல்வி கடன் பெற்ற மாணவர்களை, அவர்களின் பெற்றோர்களை வங்கி நிர்வாகங்கள் உடனடியாக பணத்தை கட்ட சொல்லி நிர்ப்பந்தம் செய்ய கூடாது.நல்ல நிலையில் தொழில் செய்து வந்த தொழில் முனைவோர்களே, பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த, அவகாசம் கேட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வராக்கடன் என, தள்ளுபடி செய்துவிட்டு, ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கடனாக பெற்ற தொகையை வசூலிக்க, உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி, வங்கி நிர்வாகங்கள் மிரட்டுவது ஏற்புடையதல்ல.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X