ஜி.எஸ்.டி., நிலுவை வழக்குதீர்வுக்கு டிச., 31 வரை அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., நிலுவை வழக்குதீர்வுக்கு டிச., 31 வரை அவகாசம்

Added : டிச 01, 2019

கோவை:ஜி.எஸ்.டி., நிலுவை வழக்குகளில் தீர்வு காண, டிச., 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய கலால், சேவை வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண 'சப்காஸ் விஸ்வாஸ்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளையில் நேற்று நடந்தது.இதில், கோவையிலுள்ள கலால் மற்றும் சேவை வரித்துறை இணை கமிஷனர் பெரியசாமி விழிப்புணர்வுநிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''மத்திய அரசு, கலால் மற்றும் சேவை வரி தொடர்பான நிலுவை வழக்குகளில் தீர்வு காண, வாய்ப்பு அளித்துள்ளது. இத்திட்டம்,டிச., 31 வரை அமலில் இருக் கும். வரி பாக்கி வைத்திருப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.கண்காணிப்பாளர் சந்திர சுரேஷ் பேசுகையில், ''இத்திட்டம் மூலம் நிலுவையிலுள்ள பழைய வரியை குறைத்து செலுத்தலாம். இதில், குறைந்த அளவில் வரி விதிப்போர் கணக்கில் கொண்டு வரப்படுவர். ஆன்லைன் முறையில் நிலுவை வரி செலுத்தலாம். அதிகாரிகளை சந்திக்க வேண்டிய தேவை இல்லை,'' என்றார்.தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி, ஐ.சி.ஏ.ஐ., தலைவர் பாலசுப்பிரமணி, கம்பெனி செக்ரட்டரிகள் நிறுவனம் ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் மகேஷ்வரன், ஐ.சி.ஏ.ஐ.,, தலைவர் ரவிந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X