'குட்டீஸ்' தடகளம்; நேவி சில்ரன்ஸ் சாம்பியன்

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:கணுவாய் யுவபாரதி பள்ளியில் நடந்த, சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டியில், நேவி சில்ரன்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டி, கணுவாயில் உள்ள, யுவபாரதி பள்ளியில் நடந்தது. தடை தாண்டும் ஓட்டம்; 8 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆதர்ஷ் வித்யாலயா புகழ் கார்த்திக் முதல் பரிசு, கவினேஷ் இரண்டாம் பரிசு, எஸ்.எஸ்.எம்., சென்ட்ரல் பள்ளி வைசாக் மூன்றாம் பரிசு பெற்றனர்.மாணவியர் பிரிவில், ஆதர்ஷ் வித்யாலயா சதுர்மிதா முதல் பரிசு, விவேகானந்தா அகாடமி ஜெய்நிதர்சனா இரண்டாம் பரிசு, ஆதர்ஷ் பள்ளி தாரிகா மூன்றாம் பரிசு பெற்றனர்.50 மீ., ஓட்டம்; 8 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆதர்ஷ் பள்ளி புகழ் கார்த்திக், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி தருண்ராம் மற்றும் விவேகானந்தா அகாடமி ஆதர்ஷன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், ஆதர்ஷ் பள்ளி சதுர்மிதா, வினேகானந்தா அகாடமி ஜெய்நிதர்சனா மற்றும் யுவபாரதி பள்ளி அஷ்விகா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.60 மீ., தடை தாண்டும் ஓட்டம்; 10 வயதுக்கு உட்பட்ட, மாணவர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி காவேயுகன் முதல் பரிசு, நேவி சில்ரன்ஸ் பள்ளி பிரசாந்த் குமார் இரண்டாமிடம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி கிருதிக் மூன்றாம் பரிசு பெற்றனர்.மாணவியர் பிரிவில், சாகர் சர்வதேச பள்ளி அனன்யா முதல் பரிசு, நேவி சில்ரன்ஸ் பள்ளி ஆயுஷ்சிங் இரண்டாம் பரிசு, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி சாத்விகா மூன்றாம் பரிசு பெற்றனர்.80 மீ., ஓட்டம்; 10 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி காவேயுகன், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மிதுல்ராம் மற்றும் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி சித்தார்த் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி தனிஷ்கா, சாகர் சர்வதேச பள்ளி அனன்யா மற்றும் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சாய்சஞ்சனா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.4x100 மீ., ரிலே; 10 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், விவேகானந்தா அகாடமி பள்ளி முதல் பரிசு, ஹனீ பஞ்ச் பள்ளி இரண்டாம் பரிசு, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மூன்றாம் பரிசு பெற்றன.மாணவியர் பிரிவில், நேவி சில்ரன்ஸ் பள்ளி முதல் பரிசு, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி இரண்டாம் பரிசு, ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. நேவி சில்ரன்ஸ் பள்ளி, 8 மற்றும், 10 வயதுக்கு உட்பட்ட, மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில் சாதித்து, ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X