சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லேப்-டாப், மொபைல் போன் திருடிய மாணவர்கள் கைது

Added : டிச 01, 2019
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான லேப்-டாப்புகள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே மொபைல் போன் கடை வைத்துள்ளார். கடந்த அக்., 31 மற்றும் செப்., 28ம் தேதிகளில் இவரது கடையின் பூட்டை உடைத்து, ஒன்றரை லட்சம் மதிப்பிலான மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது, மொபட்டில் வரும் பள்ளி சீருடை அணிந்த சிறுவர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிந்தது.

மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் மற்றும் விருத்தாசலம் டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் இணைந்து, சிறுவர்கள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ.,யில் படிக்கும் நான்கு மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதில் மூன்று மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில், மொபைல் போன், லேப்டாப் என பெருநகர மாணவர்களை போல ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக, பூட்டுகளை லாவகமாக திறப்பது, எவ்வாறு திருடுவது என யூ-டியூபில் பார்த்து, தெரிந்து கொண்டுள்ளனர். பின்னர், நான்கு பேரில், ஒருவர் படிக்கும் அரசு பள்ளியில் இருந்து ஏழு லேப்டாப்கள், விருத்தாசலம் மொபைல் போன் கடையில் 8 மொபைல் போன்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட உதிரி பாகங்களை திருடியது தெரிய வந்தது.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூன்று மாணவர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 லேப்டாப்கள், 4 மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும், 4 மொபைல் போன்களுடன் தலைமறைவாக உள்ள மற்றொரு 17 வயது மாணவரை தேடி வருகின்றனர். பள்ளி சென்ற சிறுவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கதறிய பெற்றோர்:


திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களின் பெற்றோர், போலீஸ் ஸ்டேஷன் முன் கதறியபடி நின்றனர். தினசரி பள்ளிக்கு தான், சென்று வந்தனர் என நினைத்திருந்த பெற்றோருக்கு, அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X