பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கல்வி துறையில்தமிழகம் சிறந்து விளங்குகிறது

Added : டிச 01, 2019
Advertisement

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழக நிதிநிலை சீரமைப்பிற்காக, கடந்த ஆறு ஆண்டிகளில் அரசு 1,827 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

நிதி நிர்வாகத்தை சீரமைக்கும் வகையில், இதுவரை 4,637 பேர் பணி நிரவல் முறையில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியது;இதே சாஸ்திரி அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கடந்த 1967ம் ஆண்டு அண்ணாதுரையும், 1979ம் ஆண்டு பொன்விழாவில் எம்.ஜி.ஆர்., பங்கேற்றனர்.

மீனாட்சி கல்லுாரியாக துவங்கப்பட்டு, அண்ணாமலை பல்கலைக் கழகமாக வளர்ந்து, 100 ஆண்டுகள் கடக்க உள்ளதுமறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், 2013ம் ஆண்டு, அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு, தற்போது 90ம் ஆண்டு விழா கொண்டாடஉள்ளது.கலை, அறிவியல், மொழி, இலக்கியம், இசை, நடனம், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்ட பெரிய பல்கலைக்கழகமாகும். அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைச்சர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், துணை வேந்தர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களை உருவாக்கியுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக வளர்ச்சி நிதியாக, கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழக அரசு 1,827 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 2019-20 கல்வி ஆண்டில் மட்டும், 296 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.பல்கலைக் கழகத்தில் நிதி நிர்வாகத்தை சீரமைக்கும் வகையில், மிகைப் பணியில் உள்ள 1800 ஆசிரியர்கள், 2,837 ஊழியர்கள் என 4,637 பேர் பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 2019-20 கல்வியாண்டில் 242 பேருக்கு பணி நிரவல் இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், மத்திய அரசின் ரூசா நிதி திட்டத்தில், முதல் தவணையாக சென்ற ஆண்டு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கு இரண்டாம் கட்ட தவணையாக, 50 கோடி ரூபாய்க்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இந்திய அளவில் 993 பல்கலைக்கழகங்கள், 39,931 கல்லுாரிகள், 10,725 தனி பாட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்த உயர் கல்வி நிலையங்களில், மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19ம் கல்வி ஆண்டில், உயர் கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற சிறந்த நிலை உள்ளது.

இதனை இந்த ஆண்டும் தமிழக உயர்கல்வித் துறை தக்க வைத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தில் 59 பல்கலைக்கழகங்கள், 2,466 கல்லுாரிகள் உள்ளன. இங்கு, சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு, 35 கல்லுாரிகள் உள்ளன. மறைந்த ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற 2011ம் ஆண்டு முதல், 65 புதிய கல்லுாரிகள், 961 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டன. தற்போது முதல்வர் பழனிசாமி, 17 புதிய கல்லுாரிகளையும், 205 புதிய பாடப்பிரிவுகளை துவக்கி வைத்துள்ளார். ஆக, கடந்த 8 ஆண்டுகளில் 82 புதிய கல்லுாரிகள், 1,166 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 26.3 சதவீதமாக உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் 2018-19ம் கல்வி ஆண்டில், 13,699 மாணவர்கள், 12,121மாணவிகள் என 25,820 பேர் பதிவு செய்து இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

பட்டம் பெறுவது வாழ்வின் ஒரு நிலை. பட்டம் பெறுவதால் மட்டுமே சிறப்பு அடைந்து விட முடியாது. பெற்ற பட்டத்தை சமூகத்தில் பயன்படுத்தி, தானும் பயன்பெற்று, மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X