பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ்களை சரிபாருங்கள்

Added : டிச 01, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : 'மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை சரிபார்த்து வைத்து கொள்ள வேண்டும்' என்று அமிர்தா பல்கலை., பேராசிரியர் அன்பு உதயசங்கர் பேசினார்.

கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' நாளிதழ், நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:காந்திக்கு அரிச்சந்திரா நாடகம் மாற்றத்தை ஏற்படுத்தியதை போல், இந்த நிகழ்ச்சி உங்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்ப மாட்டார்கள். தற்போது பெண்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றனர். படித்தவர்களால் மட்டுமே இந்த காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுக்காக நீங்கள் ஜெயித்துக்காட்ட வேண்டும்.கனவு காண வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியுள்ளார்.

கனவு என்று அவர் குறிப்பிடுவது துாங்கும் போது காண்பது அல்ல, உன்னை துாங்க விடாமல் செய்வதே கனவு.உங்கள் சான்றிதழ்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். சான்றிதழில் உள்ள பிழையை சரிசெய்யாததால் பல மாணவர்கள் கல்வியை தாமதமாக பெற்றுள்ளனர். ஆதார் கார்டு, சாதி, முதல் பட்டதாரி, வருமானம் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் என சான்றிதழ்கள் அனைத்திலும் உங்களது பெயர், பிறந்த தேதி சரியாக உள்ளதா என பாருங்கள்.

இந்த சான்றிதழ்கள் சரியாக இருந்தால் தான் அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் உள்ள சலுகைகளை பெறமுடியும். உங்களது வயதை முடிவு செய்வது கூட சான்றிதழ் தான். இதை கவனிக்க தவறினால் பல்வேறு இடங்களில் குழப்பம் வரும்.கல்லுாரியை தேர்வு செய்யும் போது பல்வேறு விஷயங்களை யோசிக்க வேண்டும். இப்போது நீங்கள் படிப்பது உங்கள் அஸ்திவாரம். அஸ்திவாரம் சரியாக இருந்தால் தான் கட்டடம் வலுபெறும். கல்லுாரி உங்கள் வாழ்க்கையை மாற்றி விடாது.

கல்லுாரி படிப்பு உங்களை மெருகேற்ற மட்டுமே. தேர்வுகள் உங்களது மனப்பாட திறனை வெளிப்படுத்துவதற்கு அல்ல, உங்களது புரிதலை தெரிந்து கொள்வதற்கு. பாடங்களை புரிந்து படியுங்கள். புத்தகத்தை தலை குனிந்து படிக்கிறவன், நாளை தலை நிமிர்ந்து நிற்பான்.தற்போது மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு துறைகள் உள்ளன. முதலில் உங்களது துறையை தேர்ந்தெடுங்கள். பல்வேறு கல்லுாரிகளுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். இதற்காக நீங்கள் அளிக்கும் கட்டணம், செலவு அல்ல முதலீடு. கல்லுாரியை தெளிவாக தேர்வு செய்யுங்கள். பள்ளி படிப்பை விட அதிகம் கற்றுக்கொள்வது கல்லுாரியில் தான்.

தேர்வு செய்யும் கல்லுாரிக்கு நேரில் சென்று கட்டமைப்பு, பாடத்திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் அதில் பங்கேற்கும் நிறுவனம் உள்ளிட்டவற்றை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மேற்படிப்புக்கு தொடர்புள்ள கல்லுாரியை தேர்வு செய்யுங்கள். புத்தியை தீட்டுவோம், வெளுத்துக் கட்டுவோம், ஜெயித்துக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X