ஓடும் அரசு பஸ்சின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் அரசு பஸ்சின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Added : டிச 01, 2019
 ஓடும் அரசு பஸ்சின் சக்கரம்  கழன்று விழுந்ததால் பரபரப்பு

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டையில், 50 பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம் உளுந்துார்பேட்டையில் இருந்து, நேற்று பகல் 12:50 மணியளவில், தடம் எண் 229, (டிஎன் 32 என் 3017) அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விருத்தாசலத்திற்கு புறப்பட்டு சென்றது.பகல் 1:10 மணியளவில் மங்கலம்பேட்டை கடைவீதி அருகே சென்றபோது, பஸ்சின் பின்பக்கசக்கரம் திடீரென கழன்று விழுந்தது. பயணிகள் மற்றும் பாதசாரிகள் கூச்சலிட்டனர். டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் சாலையின் நடுவே நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் போக்குவரத்தை மாற்றுபாதையில் திருப்பி விட்டனர்.உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பழுதடைந்த சக்கரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4:00 மணிக்கு சக்கரம் சீரமைக்கப்பட்ட பின் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் விருத்தாசலம் -உளுந்துார்பேட்டை சாலையில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவத்தால்,அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X