பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் நடத்திய 'சக்சஸ் மந்த்ரா'

Added : டிச 01, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து கள்ளக்குறிச்சியில் நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், கொட்டும் மழையில் பள்ளி மாணவ மாணவியர் ஆர்வத்துடன் குவிந்தனர்.

'தினமலர்' நாளிதழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியரின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு ஜெயித்துக் காட்டுவோம், உங்களால் முடியும், அறம் பொருள் ஐ.ஏ.எஸ்., பட்டம் வினாடி - வினா என பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.வரும் மார்ச் மாதம் அரசு பொது தேர்வு எழுதவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தை எளிதாக எதிர்கொள்வது தொடர்பாக 'சக்சஸ் மந்த்ரா' எனும் ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சியை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., திருமண மஹாலில் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கிய கல்வி நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் மாணவ மாணவியர் பெற்றோருடன் ஆர்வத்துடன் குவிந்தனர்.மாணவ மாணவிகளுக்கு குறிப்புகள் மற்றும் வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. விழாவில் வி.ஏ.எஸ்., திருமண மண்டப உரிமையாளர் கோபால கிருஷ்ணன் கவுர விக்கப்பட்டார்.பொதுத் தேர்வை பயமின்றி எழுதுவதற்கான ஆலோசனைகள், புதிய பாடத் திட்டம் தயாரிப்பதற்கான காரணம் மற்றும் நோக்கம், புதிய பாடத் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு நடைபெறும் விதம் உட்பட பல்வேறு தலைப்புகளில் அமிர்தா பல்கலைக் கழக பேராசிரியர் அன்புஉதயசங்கர், விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் செந்தில்ராஜ் மற்றும் தேர்வு காலங்களில் மாணவர்களின் மனநலம், வாழ்வியல் தொடர்பாக உளவியல் நிபுணர் புதுச்சேரி புகழேந்தி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

எதிர்கால தொலைநோக்குடன் சிந்தித்து, அரசு கல்வியில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பாடபுத்தகங்களில் படித்ததை மட்டும் மனதில் கொண்டு வெற்றி பெற முடியாது. தகுதி தேர்வு, நீட் தேர்வு, அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்று வெற்றி அடையும் உரிய வழிமுறைகளை மாணவ மாணவிகள் மனதில் பதியும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வியாளர்கள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எளிதில் புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களில் உள்ள விவரப்படி முக்கியமான குறிப்புகள் விளங்குகின்றன.புதிய பாடத்திட்டம் மூலம் சாதிப்பது குறித்தும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் கல்வியாளர்களின் ஆலோசனைகள் அமைந்ததாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இலவச பஸ் வசதிதினமலர் 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவ மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில், இலவச பஸ் இயக்கப்பட்டது. அதேபோல், தியாகதுருகத்திலிருந்து மவுண்ட்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் இலவச பஸ் இயக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X