பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலையில் 83வது பட்டமளிப்பு விழா

Added : டிச 01, 2019
Share
Advertisement
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், 57,407 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 83வது பட்டமளிப்பு விழா, சாஸ்திரி அரங்கில், நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித், நிர்வாக அலுவலக செனட் அரங்கில் நடந்த கூட்டத்தில், 10.15 மணிக்கு
 அண்ணாமலை பல்கலையில் 83வது பட்டமளிப்பு விழா

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், 57,407 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 83வது பட்டமளிப்பு விழா, சாஸ்திரி அரங்கில், நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித், நிர்வாக அலுவலக செனட் அரங்கில் நடந்த கூட்டத்தில், 10.15 மணிக்கு பங்கேற்றார். பல்கலைக்கழக என்.சி.சி., என்,எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பட்டமளிப்பு விழா காலை 10.45 மணிக்கு துவங்கியது. துணைவேந்தர் முருகேசன் வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சத்யநாராயண மூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.விழாவில், கலை, அறிவியல், கடல் வாழ் உயிரியல் இந்திய மொழி, பொறியியல், கல்வியியல், வேளாண்மை, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட 11 புலத்தை சேர்ந்த 37 மாணவர்கள் தங்க மெடல், 96 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உட்பட 57,407 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பிஎச். டி., ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிப்பு முடித்த 376 மாணவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கி, கல்வி உறுதிமொழி ஏற்கச் செய்தார். பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், தொலைத்துார கல்வி இயக்குனர் அருள், சிண்டிகேட் உறுப்பினர்கள் முனைவர் திருவள்ளுவன், பாண்டியன் எம்.எல்.ஏ., உமாமகேஸ்வரன், சார்லஸ், உள்ளிட்ட அனைத்து புல முதல்வர்கள், அனைத்து துறை தலைவர்கள், கல்வியியல் கல்லுாரி துணை வேந்தர் பஞ்சநாதன், முன்னாள் பதிவாளர் ஆறுமுகம், கதிரேசன், ராம்குமார், திருமால், எம்.எல்.ஏ., முருகுமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், பாலசுந்தரம், முருகேசன், சவுந்திரபாண்டியன், குமார், செந்தில்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X